எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய அத்தாட்சி மின்னஞ்சல் முகவரி: aththatchi@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
Admin-message
Published On: Monday, February 29, 2016

கண்டி நகரில் இன்று விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்கு

Print Friendly and PDF

கண்டி நகரின் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு மற்றுமொரு பரீட்சார்த்த நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி, இன்று மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இரு பாதைகளின் போக்குவரத்து ஒழுங்குகளை ஒரு வழிப்பாதையாக்க போக்குவரத்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வில்லியம் கோபல்லாவ மாவத்தை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புத்தர் சிலையின் முன்னால் இருந்து கெட்டம்பே வரை உள்ள பாதையில் வாகன போக்குவரத்து கெட்டம்பே வரையில் மாத்திரம் பயணிக்கும்.

கெட்டம்பே தியகபநாராம அருகிலுள்ள சுற்றுவட்டம் முதல் கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் வரையுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை வழியான வாகனப் போக்குவரத்துக்கள் நகர் பக்கமாக மாத்திரமே இடம்பெறும்.

கடந்த பெப்ருவரி 16 ஆம் திகதி அறிமுகம் செய்த வாகனப் போக்குவரத்துப் பரீட்சார்த்த திட்டமும் கண்டி நகருக்குள் இன்னும் செயற்படுத்தப்படுவதாகவும் கண்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அத்தாட்சி இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அத்தாட்சி மீடியா நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அத்தாட்சியுடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான கருத்துக்களை இடவும்

 

Sign Up to Aththatchi Newsletter

© 2016 ATHTHATCHI NEWS All Rights Reserved
|
Call us on (+94) 728 855 738